style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க சமீபமாக தமிழ் சினிமாவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மட்டும் தற்போது டிவியில் தொடராக வெளியாக இருக்கிறது. இந்த தொடரை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்றும் 30 பகுதிகளாக இந்த தொடர் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பகுதியும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும் என்றும், நடிகர்கள் ரஞ்சித், வினீத் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.