Skip to main content

மலையாளத்தில் களம் இறங்கும் கெளதம் மேனன்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
gautham menon debut directorail in malayalam cinema

இயக்குநர் கௌதம் மேனன் சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த அவர், கடைசியாக ‘ஜோஷ்வா இமை போல காக்க’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. 

இதற்கிடையே கௌதம் மேனன், மலையாள நடிகர் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் ஒரு படம் இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது

இந்த நிலையில், கெளதம் மேனன் - மம்மூட்டி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் பூஜையுடன் துவங்கியுள்ளது. மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.  

கடைசியாக மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘டர்போ’ என்ற மலையாளப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய கௌதம் மேனன் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

லட்சக்கணக்கில் ஏலம் போன மம்மூட்டியின் புகைப்படம்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Mammootty's photo sold for millions!

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, பல படங்களில் நடித்து வெற்றியைக் கொடுத்துள்ளார். தமிழிலும், அழகன், ஆனந்தம், தளபதி, பேரன்பு போன்ற நல்ல படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த ‘காதல் தி கோர்’ மற்றும் ‘பிரம்மயுகம்’ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனைப் படைத்துள்ளது. 

தற்போது மம்மூட்டி, கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டியோடி இணைந்து ‘டர்போ’ என்ற படத்திலும், ‘பஸூக்கா’ படத்திலும் நடித்து வருகிறார். மம்மூட்டி சினிமாவைத் தாண்டி புகைப்படங்களும் எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள இயற்கையான விஷயங்களையும், அழகான விஷயங்களையும் புகைப்படங்களாக எடுத்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்வார். 

இந்த நிலையில், சமீபத்தில் மம்மூட்டி எடுத்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படம் லட்சக்கணக்கில் ஏலம் போயுள்ளது. மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி புகைப்படக் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், மம்மூட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படம் ஏலத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. அவர் எடுத்த புகைப்படத்தை ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூ.1 லட்சத்தில் இருந்து தொடங்கப்பட்டது. பிரபல தொழிலதிபரான அச்சு உல்லட்டில், மம்மூட்டியின் புகைப்படத்தை ரூ.3 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். 

Next Story

சர்ச்சையில் சிக்கிய  மம்மூட்டி; ஆதரவாகக் களமிறங்கிய அரசியல் தலைவர்கள்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
cpim leaders, supports mammooty for puzhu movie issue

மம்மூட்டி நடிப்பில் 2022ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான படம் புழு. ரதீனா என்ற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் ரதீனாவுன் கணவர் ஷர்ஷத் சில தினங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில், இப்படம் குறித்து பேசியிருந்தார். அவர், இந்த படம் ஒரு சமூகத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டு இந்த படத்தில் நடித்தற்காக மம்மூட்டியையும் விமர்சித்திருந்தார். 

இது தற்போது சர்ச்சையாக மாறி சமூக வலைதளங்களில் மம்மூட்டிக்கு எதிராக சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதாவது மம்மூட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மம்மூட்டிக்கு ஆதராக அரசியல் கட்சி தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர், வாசுதேவன் சிவன்குட்டி, “இந்த வேலையெல்லாம் கேரளாவில் எடுபடாது. மம்மூட்டி கேரளாவின் பெருமை” என அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதே கட்சியை சார்ந்த மற்றொரு அமைச்சர், கே.ராஜன், அவரது சமூக வலைதளப்பக்கத்தில், “மம்முட்டியை முகமது குட்டி என்றும், கமலை கமாலுதீன் என்றும், விஜய்யை ஜோசப் விஜய் என்றும் அழைக்கின்றனர். அதுதான் மதவாதிகளின் அரசியல். ஆனால், கேரளா மண் முற்றிலும் வேறுபட்டது. அவர்களின் மதவாத அரசியலுக்கு இங்கு இடமில்லை” என   பதிவிட்டுள்ளார். 

பின்பு,அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “மாநிலத்தின் மதச்சார்பற்ற சமூகம் இதுபோன்ற பிரச்சாரத்தை ஆதரிக்காது. தெளிவான அரசியல் பார்வையும் நடிப்புத் திறமையும் கொண்ட ஒருவரை எவ்வளவுதான் முத்திரை குத்த முயன்றாலும் கேரள மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். வெறுப்பு பிரச்சாரங்களின் விஷமனத்தால் நடிகரை பாதிக்கப்படாமல் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார்” என அவரது சமூக வலைதளப்பக்த்தில் பதிவிட்டுள்ளார்.