gautham ranjith

பல இயக்குனர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் அந்தாலஜி வகை படங்கள் எடுக்கும் ட்ரெண்ட் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது. அண்மை காலமாக முன்னணி இயக்குனர்கள் இணைந்து பிரபல ஓடிடி நிறுவனங்களுக்கான அந்தாலஜி படங்கள் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisment

அந்த வகையில் 'குட்டி லவ் ஸ்டோரி' என்ற தலைப்பில் கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து அந்தாலஜி படம் ஒன்றை இயக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு படமும் 30 நிமிடங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இது தவிர்த்து இன்னொரு அந்தாலஜி பாணியிலான திரைப்படம் தயாரிப்பில் இருக்கிறது. இந்தபடத்தை வெங்கட் பிரபு தயாரித்து வருகிறார். த்ரில்லர் பாணியிலான இந்த ஆந்தாலஜி படத்தை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, ராஜேஷ், சிம்பு தேவன் மற்றும் பா.இரஞ்சித் ஆகிய 5 இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்த படத்தில் சில இயக்குனர்களின் பகுதிகள் முழுவதும் ஷூட் செய்யப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Advertisment