இயக்குநர் லிங்குசாமியின் ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் நடைபெற்ற நிலையில் இயக்குநர் மற்றும் லிங்குசாமியின் நண்பர் கௌதம் வாசுதேவ் மேனன் நூலை வெளியிட்டார். அதை நடிகை அபிராமி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், “லிங்குசாமியின் வட்டத்தில் எவ்ளோவோ பேர் இருக்காங்க, எதுக்கு என்னை கூப்பிட்டு நூலை வெளியிட்டாங்க... இபப்டிலாம் நான் சொல்லப்போறதில்ல. ஏன்னா, என்னுடைய நண்பன் லிங்குசாமியின் நூலை நான் தான் வெளியிட வேண்டும். நான் சிரித்து பழகி கருத்தை கவரும் என்ற ரசிகன் என்று என் நண்பனுக்கு நல்லா தெரியும். உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என் நண்பன் என எனக்கு நல்லா தெரியும்.
4 ஏ.எம். ஃபிரண்ட் என ஒரு விஷயம் இருக்கு. அதாவது, 4 மணிக்கு அவரை எழுப்பி என்ன வேணாலும் பேசலாம். அதுக்கு ஒரு தகுதி இருக்கு. அதன்படி லுங்குசாமியின் 4 ஏ.எம். பிரண்ட் நான் தான். ஆனால் நான் 7 மணிக்குதான் எழுந்திருப்பேன். அதனால் என்னுடைய 7 ஏ.எம். பிரண்ட் அவர். இரண்டு பேரும் நிறைய பேசுவோம். அதில் அவர் தான் அதிகம் பேசுவார். நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன். அவர் பேசுவதில் அவ்ளோ சுவாரஸ்யம் இருக்கும். என்னுடைய நலனில் மிகவும் அக்கறை உள்ளவர். என்னுடைய திரைக்கு வராத படத்தின் மேல் அவருக்கு நிறைய அக்கறை இருக்கு. அதைப் பற்றி நிறைய பேரிடம் பேசி படத்தின் பிரச்சனைகளை அவர் சரி செய்தார். அந்த படம் வருமென நம்பிக்கையுடன் இருக்கும் ஒரே ஒரு ஆள் அவர் மட்டும் தான்.
நூலில் அவர் எழுதிய, தீக்குச்சி உரசிய அதே கணத்தில் வானில் மின்னல் என்ற கவிதை எனக்கு ரன் படம் பார்த்தை உணரை தந்தது. அதை படித்த போது, ரொமான்ஸ் கவிதை என புரிந்தது. அதே சமயம் எந்த நேரத்தில் தீக்குச்சி தோன்றியது, ஒரு வன்முறைக்கான தொடக்கமா இது இருக்கலாமா... இதை படமாக்கி லிங்குசாமியிடம் போட்டுக் காட்ட வேண்டும் என நினைக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
Follow Us