Advertisment

“விக்ரமிற்கு முன்னாடி ரஜினியிடம் இந்த கதை சொன்னேன்” - கெளதம் மேனன் சுவாரசியம்

gautham menon about dhruva natchathiram

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. ஒருவழியாக வருகிற 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

Advertisment

இப்படம் குறித்து பேசிய கெளதம் மேனன், “இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருடன் ஸ்டைலிஷான ஒரு படம். ஒரு 11 பேர் பத்தின கதை இது. தொடர்ந்து பாகங்களாக உருவாகும் கதையம்சம் கொண்டது. அதனுடைய தொடக்கம் தான் துருவ நட்சத்திரம். சூர்யாவுக்கு சொன்ன கதைக்கும் இதற்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் தான் மிஸ். விக்ரம் வந்த பிறகு அந்த 20 வயசு போர்ஷன் வேண்டாம் என முடிவெடுத்தேன். விக்ரம் சாருக்கு முன்னாடி ரஜினி சாருக்கு இந்த கதை சொன்னேன். அவருக்கும் பிடித்தது. பின்பு சில காரணங்களால் அது கை கூடாமல் போனது. அமிதாப் பச்சனை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டேன். சில காரணங்களால் அவர் மறுத்துவிட்டனர். இந்த படம் ஒரு பெரிய பட்ஜெட் படம். 6 நாடுகளுக்கு சென்று ஷுட்டிங் நடத்தினோம். இந்த படம் நல்ல ஹிட்டானால் அடுத்தடுத்த பார்ட் உருவாகும்.

Advertisment

நடிகனாக நடித்தபின் நடிகர்களின் மேல் ஒரு மரியாதை உருவானது. வெற்றிமாறன், லோகேஷ் படங்களில் நடித்த பொழுது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால் நடிப்பதை விட இயக்கம் தான் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் நடிப்பதை குறைத்து வருகிறேன். எனக்கு உடன்படாத காட்சிகளில் நடிப்பதில்லை” என்றார்.

Actor Rajinikanth actor vikram Dhruva Natchathiram gautham menon
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe