Skip to main content

கௌதம் கார்த்திக்கின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Gautham Karthik

 

நடிகர் கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் கடைசியாக வெளியான படம், 'தேவராட்டம்'. இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் எழில் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் கவனம் செலுத்திவருகிறார். இந்த நிலையில், கௌதம் கார்த்திக்கின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அறிமுக இயக்குனர் தக்‌ஷிணாமூர்த்தி ராமர் இயக்கவுள்ள இப்படம், மதுரை பின்னணி கதைக்களமாகும். இப்படத்திற்கான பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல் படத்தில் இணைந்த கௌதம் கார்த்திக்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
gautham karthik in kamal thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தில் நடிக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக முன்பே படக்குழு அறிவித்திருந்தனர். கடந்த கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  

இப்படத்தில் விருமாண்டி புகழ் அபிராமியும், நாசரும் நடிக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Next Story

"அதுவெல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தது; தற்போது கவனமாக இருக்கிறேன்" - கௌதம் கார்த்தி பேட்டி 

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Gautham Karthik

 

நடிகர் கார்த்திக்கின் மகனும் இளம் நடிகருமான கௌதம் கார்த்திக், நக்கீரன் ஸ்டூடியோவுடனான சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"நான் இங்கிலிஷ் சைக்காலஜிதான் படித்திருக்கிறேன். நடிகராக வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. திடீரென ஒருநாள் மணி சார் என்னை அழைத்தார். நான் அவரைச் சென்று சந்திக்கையில் தமிழ் பேசுவியா என்று கேட்டார். நான் பேசுவேன் என்று சொன்னவுடன் சரி கிளம்பு என அனுப்பிவிட்டார். பிறகு அவருடன் இணைந்து கதை வேலைகள் செய்தேன். என்னை அவருடைய உதவி இயக்குநராக சேர்த்துள்ளார் என்றுதான் நினைத்தேன். ஒருநாள் ஒரு சீனைக் கொடுத்து நடிக்கச் சொன்னார். எனக்கே ஷாக்கிங்காக இருந்தது. நான் நடித்துக்காட்டியது அவருக்கு பிடித்திருந்ததால் கடல் படத்தில் என்னையே ஹீரோவாக்கிவிட்டார். 

 

என் தாத்தாவும் அப்பாவும் நடிகர்கள் என்ற எண்ணத்தை நான் வைத்துக்கொள்ளமாட்டேன். தாத்தா, அப்பா காலத்திய படங்களுக்கும் தற்போதைய படங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் அவர்களோடு மக்கள் என்னை ஒப்பிடமாட்டார்கள் என்பதால் அந்தச் சுமை எனக்கு இருந்ததில்லை. சிலர் தாத்தா மாதிரியே இருக்க என்றும் சிலர் அப்பா மாதிரியே இருக்க என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதை தவிர்க்கவும் முடியாது. என்னுடைய வேலையில் அப்பா தலையிட்டதே இல்லை. நான் உனக்கு சொல்லிக்கொடுத்தேன் என்றால் நீயாக எதையும் கற்றுக்கொள்ளமாட்டாய் என்று கடல் படத்தின்போதே அப்பா சொல்லிவிட்டார்.

 

ad

 

என் படத்தில் சாதியம் இருக்கிறது என்று அதிகமாகவே விமர்சனங்கள் வருகின்றன. நான் சாதி ஆதரவாளர் அல்ல. எனக்கு ஒரு கதை பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். நான் முதலில் நடித்த படங்களில் சாதி தொடர்பான விஷயங்கள் இருந்தது என்றால் அப்போது எனக்குத் தெரியவில்லை. தற்போது கேட்கும் கதைகளில் அப்படி எதுவும் இருக்கிறதா என்று மிகவும் கவனமாகக் கேட்கிறேன். தேவராட்டம் படம் ஆரம்பிக்கும்போது அப்படி ஆரம்பிக்கவில்லை. டைட்டில் தேவராட்டம் என்று போடும்போதுதான் இது சாதி படம் என்று பேச்சு வந்தது. நான் டார்கெட் பண்ணி அதுபோன்ற படங்களில் நடிப்பதில்லை".