/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/02_77.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக வலம் வரும் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். 'தேவராட்டம்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக இருவரும் காதலை அறிவித்த நிலையில் திருமணம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்.
அதன்படி இவர்களது திருமணம் இன்று (28.11.2022) எளிய முறையில் நடைபெற்றுள்ளது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கவுதம் கார்த்திக், இப்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஆகஸ்ட் 16 - 1947' படத்திலும் நடிக்கிறார். மஞ்சிமா மோகன், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்ற படத்தில் நடிக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)