Advertisment

என்னுடைய படங்களை அப்பா பார்த்ததில்லை -  கெளதம் கார்த்திக்

Gautham Karthik Interview

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தில் நடித்த நடிகர் கௌதம் கார்த்திக் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

Advertisment

கௌதம் கார்த்திக் பேசியதாவது “என்னுடைய திருமண வாழ்வில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பத்து தல படத்தில் என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்கின்றது. சிம்பு அண்ணன் எனக்கு வழங்கிய இடம் தான் அனைத்துக்கும் காரணம். 1947 படத்தில் பல்வேறு சவால்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த படக்குழுவின் ஒத்துழைப்பால் எனக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை. படம் வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையோடு பணியாற்றினோம்.

Advertisment

வெற்றி தோல்விக்காக நான் உழைப்பதில்லை. அனைத்து படங்களுக்கும் சமமான உழைப்பையே வழங்குகிறேன். வெற்றியை நோக்கிப் பயணிப்பதை விட, உழைப்பில் கவனம் செலுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று மஞ்சிமா ஒருமுறை கூறினார். அதை நான் பின்பற்றுகிறேன். என்னுடைய வாழ்க்கை முடிவுகள் எதுவாக இருந்தாலும் மஞ்சிமாவுடன் ஆலோசனை செய்யாமல் நான் எடுக்க மாட்டேன். அனைத்திலுமே இருவரும் சேர்ந்து தான் முடிவுகளை எடுப்போம். என்னுடைய பாரங்களைக் குறைத்தவர் மஞ்சிமா. அவருக்கு நான் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். திருமணம் என்பது மிக அழகான ஒரு உறவு. இணையராக அனைவருக்கும் ஒரு ரோல் மாடல் சூர்யா-ஜோதிகா ஜோடி தான். அவர்களைப் பார்த்து நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது.

என்னுடைய படங்களை அப்பா அவ்வளவாகப் பார்த்ததில்லை. அது ஏன் என்று நானும் கேட்டதில்லை. ஒருவருடைய வேலையில் இன்னொருவர் தலையிடுவதில்லை என்கிற முடிவை நான் சினிமாவுக்கு வரும்போதே இருவரும் எடுத்துவிட்டோம். எனவே வீட்டுக்குள் எப்போதும் நாங்கள் தந்தை மகனாக மட்டுமே இருப்போம்.

N Studio
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe