gautham karthik finished his dubbing in simbu starring pathu thala

Advertisment

சிம்பு, கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படக்குழு படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதில் கவுதம் கார்த்திக் தனது டப்பிங் பணிகளை முடிந்துவிட்டதாகத்தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.