/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_101.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக வலம் வருபவர் கவுதம் கார்த்திக். மணிரத்னத்தின் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமான இவர்.ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம்உள்ளிட்ட சில ஹிட் படங்களைக்கொடுத்துள்ளார். இப்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஆகஸ்ட் 16 - 1947' படத்திலும்நடிக்கிறார்.
இதனிடையே கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே கோலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டது. அதனைத்தற்போது இருவருமே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களைதங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து மஞ்சிமா மோகன், "மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோன போது நீ ஒரு காவலனாய்என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள்என்பதை உணர உதவினாய். நீ எப்போதும் எல்லாவற்றிலும் என்னுடைய ஃபேவரட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கவுதம் கார்த்திக், "சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்? பெரும்பாலானவர்கள் சொல்வார்கள்,நீங்கள் அவர்கள் மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள், உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள் என்று. அது இப்போது என் வாழ்வில் நடந்திருக்கிறது. மஞ்சிமா மோகன், நீ நமக்குள் ஏற்படுத்திய உறவை விவரிக்க 'காதல்' என்ற வார்த்தை கூட போதுமானதாக இருக்காது. ஐ லவ் யூ" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'தேவராட்டம்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)