/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/83_35.jpg)
நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும்சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் காதலர் தினமான இன்று இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்ய மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக இருவரும் மலை மீது சென்றனர். இவர்களைப் பார்த்த பக்தர்கள் பலர் புகைப்படம் எடுக்கத்திரண்டனர். அதனால் விரைவாக சாமி தரிசனம் செய்து பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றனர்.
பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து திரை பிரபலங்கள் வருகை தர துவங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று சமந்தா, இயக்குநர் பிரேம் குமார் உள்ளிட்டோர் தரிசனம் மேற்கொண்டதை அடுத்து தற்போது திருமண தம்பதியான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் வழிபாடு செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)