style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை அடுத்து நடிகர் கௌதம் கார்த்திக் அடுத்ததாக தன் தந்தை நவரச நாயகன் கார்த்திக்குடன் இணைந்து நடித்த 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரு இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, மைம் கோபி, சதீஷ், சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் நேற்று நடந்தது அப்போது விழாவில் நடிகர் சதிஷ் இப்படம் குறித்து பேசும்போது.... "இப்படத்திற்கு தனஞ்செயன் எல்லா விதத்திலும் புரோமோசன் செய்து வருகிறார். யாராவது செல்பி எடுக்க என்னருகே வந்தால் நான் மிஸ்டர் சந்திரமௌலி படத்தை பேச ஆரம்பித்து விடுகிறேன்.எங்கள் எல்லாரையும் அப்படி டியூன் செய்து வைத்துவிட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கௌதம் கார்த்திக் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அதுதான் அவருடைய உண்மையான கேரக்டர். நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். பேய்க்கு பயப்படுவார். அதைதான் அப்படி சொன்னேன். இப்படம் வந்த பிறகு ரெஜினா ஆர்மி என ரசிகர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். இந்த படத்தில் அவரது உடைகளை பார்த்த பிறகு லோ பட்ஜெட் படம் என நினைக்க வேண்டாம். படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் தனஞ்செயன்" என்றார் சதிஷ்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/PXcs1jFcGO0.jpg?itok=zS0bm8Tp","video_url":" Video (Responsive, autoplaying)."]}
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">