
யோகிபாபு எமதர்மனாக நடித்த 'தர்மபிரபு' வெற்றிப்படத்தின் மூலம்எல்லோரது கவனத்தையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ், அடுத்ததாக முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள். குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும்இந்தத் திரைப்படத்தில் நாயகன் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து இயக்குனர் சேரன் நடிக்கிறார்.
டாக்டர் ராஜசேகர் ஜீவிதாவின் இரண்டாவது மகள் ஷிவாத்மிக்கா நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், டேனியல் பாலாஜி, சரவணன், ‘கிழக்குச் சீமையிலே’ விக்னேஷ், சிங்கம் புலி, ஜோமல்லூரி, கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், விஜய் டிவி ஜாக்குலின், மௌனிகா, மைனா, ‘பருத்திவீரன்’ சுஜாதா, ஜானகி, பிரியங்கா, ‘நக்கலைட்ஸ்’தனம் என ஏராளமானநட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். குடும்பச் சித்திரமாகஉருவாகும் இந்தத் திரைப்படத்தை நந்தா பெரியசாமி எழுதி இயக்குகிறார்.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘ட்ரிப்’ பட புகழ் சித்துகுமார் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ வாரி பிலிம்ஸ் தயாரிப்பில் பி ரங்கநாதன் தயாரிக்கிறார். வரும் மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
Follow Us