/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EuL-XhQVkAEBCZY.jpg)
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிஷி ரிச்சர்ட், ஷீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திரௌபதி'. படம் வெளியானபோது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. மேலும், 'க்ரவுட் ஃபண்டிங்' முறையில் எடுக்கப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பைக் கடந்த சில மாதங்களுக்கு முன் மோகன் ஜி வெளியிட்டார். 'ருத்ர தாண்டவம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ‘திரௌபதி’ நாயகன் ரிஷி ரிச்சர்ட்டே நாயகனாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார்.
படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டுபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (14.02.2021) வெளியிடப்பட்டது. இந்த நிலையில், படத்தின் வில்லன் நடிகர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் கௌதம் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.அவர் கதாபாத்திரத்திற்கு 'வாதாபிராஜன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)