gvm with surya

Advertisment

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று. மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடித்திருந்த சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அவர் அந்த கதாபாத்திரமாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கூறியுள்ளனர்.

தற்போது நெட்ஃபிளிக்ஸுக்காக உருவாகும் நவரசா என்னும் அந்தாலஜி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் சூர்யா தெரிவித்திருந்தார்.

Advertisment

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நவரசா அந்தாலஜியிலுள்ள ஒரு குறும்படத்திற்காக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கப்பட்டுள்ள இப்பட ஷூட்டிங்கில் சூர்யா நன்றாக நடித்திருக்கிறார் என்று ட்விட்டரில் பி.சி. ஸ்ரீராம் பாராட்டியுள்ளார்.