Gautam Menon is directing Shankar's daughter

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம் 'விருமன்'. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பாக சூர்யா,ஜோதிகா தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 'காஞ்ச பூ கண்ணால' பாடல் வருகிற மே 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் அதிதி ஷங்கர் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் மேனன், மலையாளத்தில் 2020-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'கப்பேலா' படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'கொரோனா குமார்' படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment