தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த படங்களில் அசுரன் படம் அசூர வெற்றியை பெற்றது. பட்டாஸ் படமும் தனுஷ் ரசிகர்களைகவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் தனுஷின் அடுத்த படத்திற்கான அப்பேட் செய்திகளை கேட்க அவரின் ரசிகர்கள் காத்துக்கிடக்கும் நிலையில், தற்போது அவர் அடுத்ததாக நடிக்கும் கர்ணன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிவரும் அந்த திரைப்படம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட அந்த படத்தின் ஸ்டில் ஒன்றை தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Advertisment

இதற்கிடையே பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது. தனுஷ் உடன் இந்த படத்தில் இணைந்து நடித்து வருவதாக நடிகை கௌரி கிஷான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் அவருடைய சிறுவயது காதலி தோற்றத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் தனுஷ் மற்றொரு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisment