Advertisment

"எனக்கும் என் பள்ளியில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது!" - நடிகை கௌரி வெளியிட்ட பதிவு!

vgegesgesw

Advertisment

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

bhrhrshrss

ஆசிரியரின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் '96' பட நடிகை கௌரி சமூகவலைத்தளத்தில் தான் படித்த அடையார் ஹிந்து பள்ளியில் தனக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதில்... "நான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ, மாணவிகளை அசிங்கமாகப் பேசுவது, சாதியை வைத்துப் பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பைக் கிண்டல் செய்வது, நம் குணாதிசயத்தைக் கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ, மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை நான் மட்டுமல்லாது என்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டனர். எனவே அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இன்னமும் அனுபவித்தால் தயங்காமல் தெரிவியுங்கள். உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

gowri g kishan
இதையும் படியுங்கள்
Subscribe