ஹிந்தி பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளரான நடிகை கவுஹர் கான் பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுத்தப்பட்டது. அவரும் சில நாட்கள் தன்னை தனிமை படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் அவர் திடீரென15 நாட்கள் தலைமை படுத்துதல் முடிவடைவதற்கு முன்பாகவே கரோனா தொற்றை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகை கவுஹர் கானின் இந்த பொறுப்பற்ற செயலை கண்டித்த சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு, நடிகை கவுஹர் கான் இனி வரும் 60 நாட்களுக்கு படங்களில் நடிக்க தடைவிதித்துள்ளது. நடிகை கவுஹர் கானின் இந்த பொறுப்பற்ற செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.