Advertisment

குடும்ப பிரச்சனைகளை பேசும் ‘கட்டா குஸ்தி 2’

417

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இதன் அறிவிப்பு வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். 

Advertisment

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், இப்படம் உருவாகிறது. ‘கட்டா குஸ்தி 2’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.

Advertisment

முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். முதல் பாகத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த நிலையில் இதில் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

actor vishnu vishal aishwarya lekshmi isari ganesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe