gsdg

ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேட்'. தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி, இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.

Advertisment

2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான பானு ஸ்ரீ ரெட்டி,இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ‘மாநகரம்’ படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வுதான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது. விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

Advertisment