/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/123_22.jpg)
ஹரி இயக்கத்தில் அருண்விஜய், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அருண்விஜய் 33'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, காரைக்குடி, பழனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், கருடா ராம் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அவருக்கான படப்பிடிப்பு நிறைவுபெற்றவுடன் அவரை வழியனுப்பும் பொருட்டு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் படக்குழுவினர் அவருக்கு மரியாதை செய்தார்கள். அருண் விஜய் படக்குழுவினரின் இந்தச் செயலால் நெகிழ்ச்சியடைந்த கருடா ராம், ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். மேலும், படக்குழுவினரிடம் இருந்து அவர் விடைபெறும்போது, "‘கே.ஜி.எஃப்’ படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், இதுபோல எந்த ஒரு படக்குழுவும் என்னைக் கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்" என நெகிழ்ச்சி பொங்கக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)