Advertisment

“போச்சே... எல்லாம் போச்சே...” - கதறிய கஞ்சா கருப்பு

ganja garuppu house issue

சிவகங்கையை பூர்விகமாக கொண்ட கஞ்சா கருப்பு சென்னையில் மதுரவாயில் விடுதியில் வாடைக்கு வீடு எடுத்துள்ளார். 2021 முதல் இதில் வசித்து வருவதாகவும் சென்னையில் படப்பிடிப்பு இருக்கும் போது இந்த வீட்டில் தங்குவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழலில் கஞ்சா கருப்பு தான் ஊரில் இல்லாத சமயத்தில் வீட்டின் உரிமையாளர் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகை விட முயற்சித்ததாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் வீட்டில் தனது உடைமைகள் இருக்கும்போது தனக்கு தெரியாமல் அத்துமீறி வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்ததாகவும் வீட்டில் வைத்திருந்த கலைமாமணி விருதையும் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வீட்டிற்கு சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் கஞ்சா கருப்பு மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர், கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இருவரும் மாறி மாறி புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கஞ்சா கருப்பு அவர் வாடகைக்கு இருக்கும் மதுரவாயில் வீட்டை காவல் துறையினரோடு திறந்து பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வீட்டின் உள்ளே சென்ற கஞ்சா கருப்பு போச்சே... போச்சே.. எனக் கதறிய படியே மாடிக்கு செல்கிறார். பின்பு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பல பொருட்களை காணவில்லை என அருகில் இருந்த காவல் துறையினரிடம் சொல்கிறார். மேலும் வீடு வாடகைக்கு கொடுத்தால் ஓனர் இப்படி பண்ணலாமா என பதட்டத்துடன் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த கஞ்சா கருப்பு, “நான் பணம் கொடுத்துவிட்டேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை என்கிறார். ரொக்கமாக அவ்வபோது வந்து வாங்கிக் கொண்டிருந்தார். பின்பு ஆன்லைனில் பெற்றுக் கொண்டார். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். போன மாசம் கூட நாற்பதாயிரம் கேட்டேன். அவர் வாடகை தரவில்லை என பொய் சொல்கிறார்” என்றார்.

Ganja Karuppu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe