‘உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்’ - கங்குவா படத்தின் அப்டேட் வெளியீடு!

Ganguwa Movie Update Release!

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும், இப்படம்முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கங்குவா படத்தை பற்றியஅப்டேட் ஒன்றைப் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘BRACE YOURSELVES FOR THE KING'S ARRIVAL’ எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு, படம் ரிலீஸுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கின்றன என்பதை அறிவித்துள்ளனர்.

Kanguva
இதையும் படியுங்கள்
Subscribe