தலைவா படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் அடுத்ததாக தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இருக்கிறார். அதில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பவர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளது படக்குழு.

Advertisment

gangana ranawat at thalaivi film

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அண்மையில் பாலிவுடில் மணிகர்ணிகா படத்தில் ராணி லட்சுமி பாய் வேலத்தில் நடித்து ரசிகர்களிடயே பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற நடிகை கங்கனா ரணாவத் தற்போது தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே, தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருக்கிறார். வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணு இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு பாகுபலி மற்றும் மணிகர்ணிகா படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதவிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவில் இப்படம் உருவாகிவருகிறது. கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளான இன்று படக்குழு இந்த அறிவுப்புக்களை வெளியுட்டுள்ளது.