gangai amaran talk about vijay

Advertisment

சாய் மோரா இயக்கத்தில் நடிகை புவிஷா 'முகமறியான்'படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாஇசையமைக்க திலீப் சர்மா மற்றும் திலீப் ஜெயின் இருவரும் தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு, கங்கை அமரன் உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய கங்கை அமரன், "எங்களுக்கு அம்மாவை தவிர வேற தெய்வமே கிடையாது. அம்மாதான் எல்லாமே. சமீபத்தில்விஜய் அவருடைய அம்மா அப்பாவை ஒதுக்கிவைப்பது போன்று பேசியது எனக்கு ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தியது. இத நான் ஓப்பனாவே சொல்றேன் இதுலஎன்ன பயம், விஜய்க்கு தெரிஞ்சா தெரியட்டும். நாங்களெல்லாம் சந்திரசேகரின் நாடகத்திற்கு வாசித்தவர்கள். விஜய் பிறந்தபோது அவர் அம்மா எங்களது குரூப்பில் பாடிக்கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் பழனிக்கு கச்சேரிக்கு போகும் போதெல்லாம் விஜயை அவர் தூக்கிக்கொண்டு வருவார். நாங்கலெல்லாம் அவரை கொஞ்சுவோம். அவர்கள் விஜயை எப்படி வளர்த்தார்கள் என்பது எங்களுக்கு நல்லாத்தெரியும். எப்படி வளர்ந்தாங்கன்னு பக்கத்துல இருந்து பார்த்ததுனால விஜய் இப்படி செய்வதை எங்களால தாங்க முடியல.அன்றைக்கு மறுநாளே நான் பத்திரிகைகளில் சொன்னேன். அம்மா அப்பாவை விட வேறு என்ன இருக்கிறது. எத்தனைதோல்வியை சந்தித்தாலும், தொடர்ந்து ஹீரோவாக்கிஅழகு பார்த்தது யாரு அவர்கள்தான். அதை மறந்துட்டு அம்மா அப்பாவை விலக்கி வைத்து வாழ்வது சரியாக இருக்காது. நிம்மதியாக வாழ முடியாது. அதனால் பெற்றோரிடம் சேர்ந்து வாழச்சொல்லி விஜய் ரசிகர்கள் அவரிடம் தயவு செய்து சொல்லுங்கள். அம்மா அப்பாவை கை விட்ராதிங்கஉங்களபார்த்து நாங்களும்அப்படி ஆயிட போறேன்னுசொல்லி சொல்லுங்க. இதை நான் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோளாகவைக்க ஆசைப்படுகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.