Advertisment

"இவர் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை" - கங்கை அமரன்

gangai amaran talk about panju arunachalam

தமிழ் சினிமாவில்எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலத்தின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு விழா அவரது பங்களிப்பை கொண்டாடும் வகையில் பஞ்சு 80 என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இது குறித்தபத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் கங்கை அமரன் பேசியது, "அண்ணன் பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழி தான் எங்கள் வாழ்வை ஆரம்பித்து வைத்தது. அண்ணன் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம். இப்போது நடப்பது மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தில் நடக்கும் விழாவில் பேசுவது போல் உள்ளது. இளையராஜா அண்ணனை தூக்கி விட்டது பஞ்சு அண்ணன் தான். அதே போல் என்னை வளர்த்து விட்டவர் பாரதிராஜா அவருக்கு நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

tamil cinema gangai amaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe