/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_26.jpg)
பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரன், நடிகர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகத்தன்மை வாய்ந்தவர். இசையமைப்பாளராக, 'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை', 'சுவரில்லாத சித்திரங்கள்', 'ராமாயி வயசுக்கு வந்துட்டா', 'மௌன கீதங்கள்', 'வாழ்வே மாயம்' உட்பட 55 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'கோழிகூவுது' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய கங்கை அமரன், 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'செண்பகமே செண்பகமே', 'கரகாட்டக்காரன்', 'வில்லு பாட்டுக்காரன்' உட்பட 19 படங்களை இயக்கியுள்ளார்.
அவ்வப்போது துணை கதாபாத்திரங்களில் நடித்துவந்த கங்கை அமரன் 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப்படங்களிலும் நடிக்காமல் நடிப்பிலிருந்து ஒதுங்கிஇருந்தார். இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் அருண்விஜய் 33 படத்தில் நடிப்பதன் மூலம் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் கங்கை அமரன் ஜோதிடர் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தூத்துக்குடி, காரைக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)