Advertisment

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த இசை சகோதரர்கள்

Gangai Amaran mets his brother ilaiyaraaja

Advertisment

இந்திய சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளராகஇருக்கும் இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிது பேசப்பட்டது.நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவராகதிகழ்ந்த கங்கை அமரன் கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், கோழி கூவுது, கோவில் காளைஉள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான ஒன்று, இரண்டு படங்களை தவிர மற்ற அனைத்து படங்களுக்குமேஇளையராஜா இசையமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்துபடங்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 90 களில் இவர்களதுகூட்டணி இணைந்தாலேஹிட்டு தான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது.

இதனிடையே இளையராஜாவும், அவரது சகோதரர் கங்கை அமரன் இருவரும் இணைந்து 'பெரியசாமி சின்னசாமி' என்ற படத்தை தயாரித்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும், இருவரும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் தனது சகோதரர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைதனது சமூக வலைதள பக்கத்தில்பகிர்ந்துள்ள கங்கை அமரன், "இன்று நடந்த சந்திப்பு... இறை அருளுக்குநன்றி... உறவுகள் தொடர்கதை எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைரீட்வீட் செய்து பிரேம் ஜி உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

gangai amaran Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe