
மலையாளம் மற்றும் தமிழ்த்திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பூர்ணா, கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்டவருடன் செல்போனின் மூல அறிமுகமாகியுள்ளார். அன்வர் அலி, கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் நடிகை பூர்ணாவிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு அன்வரின் குடும்பத்தினர் எனச் சொல்லி, அன்வரின் புகைப்படமென டிக்டாக் பிரபலத்தின் புகைப்படத்தைக் காட்டி நடிகை பூர்ணாவை திருமணம் செய்துவைக்க கேட்டுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு சந்தேகமடைந்த பெற்றோர், சி.சி.டி.வி. வீடியோவை ஆரய்ந்தபோது அதில் அவர்கள் வீடு, கார் ஆகியவற்றை மொபைலில் படம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அன்வர் அலியிடம் பூர்ணா கேட்டபோது, அவர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார் தற்போது ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அன்வர் அலி என்ற போலியான பெயரைப் பயன்படுத்திபூர்ணாவிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் நால்வருக்கும் கரோனா டெஸ்ட் எடுத்த பிறகு நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)