Advertisment

கிராமத்து லுக்கிற்கு மாறிய பிக் பாஸ் பிரபலம்

Ganesh Venkatram changed to  village look

தமிழ் சினிமாவில் அபியும், நானும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம்கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னை போல் ஒருவன், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம்'உன் பார்வையில்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழ், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில்வெளியாக உள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0cc17f0c-95b7-4a2c-be93-94fe263c5b99" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_19.jpg" />

Advertisment

ஸ்டைலானசிட்டி லுக்கில் இருக்கும் கணேஷ் வெங்கட்ராம் தற்போது கிராமத்து இளைஞன் போன்று புதுமையான தோற்றத்திற்கு மாறி அசத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்," இந்த கொரோனா லாக்டவுன் மொத்த சினிமா துறையையும் புதிதாக மாற்றிவிட்டது. சினிமா தன்னையே புதிப்பித்து கொண்டிருக்கிறது. 10 வருடங்களை கடந்து சினிமாவில் பயணிக்கும் நானும், என்னை புதுப்பித்துக் கொள்ள நினைத்தேன். சினிமாவில் என்னுடன் பயணிக்கும் நண்பர்களுடன் ஆலோசித்தேன். தமிழ் நாட்டிற்கு எது சிறப்பு என்று யோசித்தபோது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்த்தேன். முழுக்க என்னை கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இந்த போட்டோஷூட்டை செய்தோம். இந்த புதிய லுக், தமிழ் திரைப் படைப்பாளிகள் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் யோசித்து பார்க்க பேருதவியாக இருக்கும். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக் கொள்வது மிக முக்கியம். நம்மை அனைவரும் ஒரே மாதிரி பார்க்கும் நேரத்தில், வித்தியாசமான தோற்றம் ஒரு புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரும் " என்றார்.

big boss Ganesh Venkatram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe