Skip to main content

ஷங்கரின் கேம் சேஞ்சர்; கசியப்பட்ட பாடலால் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

game changer song leaked producer files a complaint

 

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளுக்கு ரூ. 90 கோடி செலவு செய்துள்ளதாக முன்பு ஒரு தகவல் வெளியானது. 

 

இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆவணத்தை சமூக வலைத்தளங்களில் படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் லீக்கான பாடலை யாரும் பகிர வேண்டாம் எனப் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கலில் இந்தியன் 2 - கொதித்தெழுந்த இ-சேவை மைய சங்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
shankar kamalhassan indian 2 E Service Center Owners issue

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2, கடந்த 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்று வந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து 12 நிமிடக் காட்சிகளை தற்போது நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தில் சில காட்சிகளை நீக்கச் சொல்லி திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல்லில், அம்மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது. அதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் தனராஜ், “இந்தியன் 2 திரைப்படத்தில் மனோ பாலா வரும் காட்சியில் இ-சேவை மையத்தினர் 300 ரூபாய் கொடுத்தால் மட்டுமே சேவை செய்ய முடியும் எனத் தவறுதலாக சித்தரித்து எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும். இந்த காட்சிகளினால் இ-சேவை மைய உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திரைப்பட இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் கோரிக்கை வைக்கிறோம். 

shankar kamalhassan indian 2 E Service Center Owners issue

இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், மாவட்ட ஆட்சியரிடம் இ-சேவை உரிமையாளர் நல சங்கம் சார்பாக இயக்குநர் ஷங்கர் மீது புகார் மனு அளிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும்” என்றார்.

Next Story

இந்தியன் 2 ; படக்குழு செய்த அதிரடி மாற்றம்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
indian 2 yrimmed yo 12 minutes

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2 படம், கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமரசனங்களே பெற்று வந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து படத்தின் திரைக்கதை, கமல்ஹாசனின் மேக் அப் குறித்து ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வந்தனர். குறிப்பாக, இரண்டாம் பாதியில் மிக நீளமாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதனால், இந்தியன் 2 படத்தில் 15 நிமிடக் காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

indian 2 yrimmed yo 12 minutes

இந்த நிலையில் படத்தில் கிட்டதட்ட 12 நிமிட காட்சிகளை குறைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட  புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.