gal

Advertisment

'வொண்டர் வுமன்' படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை கால் கெடாட்.

தற்போது ஹாலிவுட்டின் மிகவும் பழமையான பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் க்ளியோபட்ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கால் கெடாட் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது.

கால் கெடாட் நடிப்பில் உருவான 'வொண்டர் வுமன்' படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பேட்டி ஜென்கின்ஸ்தான், இந்தப் படத்தையும் இயக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் பல மாதங்களாக தள்ளிப்போகும் 'வொண்டர் வுமன் 1984' படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.