Advertisment

"முகத்தில் அடித்து துன்புறுத்தினார்" - தயாரிப்பாளர் மீது விஜயகாந்த் பட நடிகை பகீர் குற்றச்சாட்டு

Gajendra movie actress Flora Saini accused one producer

தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து விஜயகாந்தின்'கஜேந்திரா' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகைபுளோரா சயினி. அதைத்தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட பல்வேறு மொழிகளில் 50 படங்களுக்கு மேலாக நடித்துள்ள புளோரா சயினிவெப்சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், தான் சிறு வயதில் தயாரிப்பாளர் ஒருவரால்பாலியல்கொடுமைகளை அனுபவித்துள்ளதாகபுளோரா சயினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில்வீடியோ வெளியிட்டபுளோரா சயினி, "எனக்கு 20 வயது இருக்கும்போது10 படங்களில் நடித்தேன். மாடலாகவும் நிறைய டிசைனர்களுடன்பணியாற்றியுள்ளேன். அப்போது ஒரு பிரபல தயாரிப்பாளரின்மீது காதல் கொண்டதால் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் என்னிடம் முறைகேடாகநடந்து கொண்டார்.

Advertisment

என் முகத்திலும் அந்தரங்க இடத்திலும்அடித்து துன்புறுத்தினார். என்னுடைய போனை பிடுங்கிக் கொண்டுவேலையை விடச் சொல்லி கட்டாயப்படுத்தினார். தொடர்ந்து 14 மாதங்களாக யாரிடமும் பேசவிடாமல்சித்திரவதை செய்தார். பின்பு ஒரு நாள் மாலையில் என் வயிற்றில் குத்தினார். அதன்பின்பு அங்கிருந்து ஓடி வந்து அம்மா, அப்பாவிடம் இருக்க ஆரம்பித்தேன். இயல்பு நிலைக்குதிரும்ப பல மாதங்கள் ஆனது. இப்போது நான் மகிழ்ச்சியாக என் வேலைகளைக் கவனித்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

film producer Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe