Advertisment

“நிறம் குறித்த விமர்சனம் அதிகம் வந்துள்ளது” - கேப்ரில்லா செல்லஸ்

Gabrella Sellus  interview

சோசியல் மீடியாவிலிருந்து சின்னத்திரை, இப்பொழுது சினிமா. இந்த பயணம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியை கேப்ரில்லா செல்லஸ் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.

Advertisment

சினிமா என்பது தான் முதலிலிருந்தே என்னுடைய கனவு. நம்முடைய கனவை நிறைவேற்ற தேவதைகள் அனுப்பப்படுவார்கள். இயக்குநர் லோகேஷ் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதில் நான் ஹீரோயினாக நடிக்கக் காரணம். வெள்ளையாக இருக்கும் ஹீரோயினை கருப்பாக மாற்றித் தான் நடிக்க வைப்பார்கள். ஆனால் கதைக்குத் தேவையான நடிகையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் நினைத்தார்.

Advertisment

கலராக இல்லை என்றாலும் இன்றும் பலரது கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா தான். நிறம் குறைவான பல நடிகைகள் இங்கு வெற்றியடைந்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அப்படியான ஒரு நடிகையாக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ். நிறம் குறித்த விமர்சனம் தான் அதிகம் வந்துள்ளது. ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதே புரியவில்லை. ஆனால் அது எதுவும் என்னை பாதித்ததில்லை. எனக்கான விஷயங்கள் எப்படியும் என்னை வந்தடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

N Studio
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe