கடந்த 2011ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி பவன் கல்யாண் நடிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘கபார் சிங்’. நேற்றுடன் இப்படம் வெளியாகி எட்டு வருடங்களைக் கடந்துள்ளது. இதனை பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
சுமார் 12 மில்லியன் ட்வீட்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர். இதனிடையே, கபார் சிங் படத்தின் இயக்குனர் புது அறிவிப்பை அறிவித்துள்ளார். அதில், ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் மீண்டும் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கும் டி.எஸ்.பிதான் இசையமைக்கிறார் என்றும் படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் கரோனா வைரஸ் பரவலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 'லாக்டவுன்' முடிவடைந்தவுடன் 'வக்கீல் சாப்' படத்தின் ஷூட்டிங் தொடங்க, பவனின் 28 ஆவது படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.