gaami ott update

கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள படம் காமி. இதில் விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது.

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர் வித்யாதர் கூறுகையில், “காமி படத்தை உருவாக்குவது பல சவால்கள் நிறைந்த பயணமாக இருந்தது, ஆனால் இப்படத்திற்குப் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் எங்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இப்படத்திற்காக நாங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் கடின உழைப்பைத் தந்துள்ளோம், இப்போது ஜீ5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்

Advertisment