Fraud in Lokesh Kanagaraj's name actor brahmaji alert

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற 19ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பெயரில் பண மோசடி நடந்து வருவதாக தெலுங்கு நடிகர் பிரம்மாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நட்ராஜ் அண்ணாதுரை என்பவர் லோகேஷ் கனகராஜின் மேலாளர் என்றும், உங்கள் சுயவிவரம் அவரது அடுத்த படத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார். நடிப்பு தேர்வுக்கு வரும்போது சரியான உடைகளை அணிய பணம் அனுப்பினால், ஆடிஷன் முடிந்ததும் பணம் திரும்ப தரப்படும் என்றும் கூறுகிறார். சினிமாவில் இது புது விதமான மோசடியாக இருக்கிறது. கவனமாக இருங்கள் மக்களே" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த சத்யதேவ் என்பவர் வருங்கால நடிகர்களை, பத்திரிகையாளர் என்று சொல்லி ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.