mulan

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பல நாடுகளில் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே இந்த காலகட்டத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படங்கள் ரிலீஸாகாமல் ஒத்திவைக்கப்படுகின்றன அல்லது ஓடிடியில் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் டிஸ்னி நிறுவனம் பெரும் செலவில் தயாரித்த முலன் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான 'முலன்' சில மாதங்களுக்கு முன்பே திரையரங்கில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தலால் ரிலீஸாகவில்லை.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட முலன் படம் எப்படியானாலும் திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், திடீரென டிஸ்னி நிறுவனம் ஓடிடியில் வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த படத்தை பார்க்க 29.99 டாலர்கள் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், 'முலன்' திரைப்படத்துக்காக பல மாதங்களாக விளம்பரம் செய்து வந்த பிரான்ஸ் திரையரங்க உரிமையாளர் ஒருவர், இந்த முடிவால் ஆத்திரமடைந்து, தனது திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 'முலன்' விளம்பர போஸ்டரை அடித்து நொறுக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பத்து லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.