/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/253_8.jpg)
துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ராணுவ வீரருக்கும் இளவரசிக்கும் இடையேயான காதலை அழகாக சொல்லியிருக்கும் இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் இந்தியாவின் முன்னாள்துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 'சீதா ராமம்' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது 'சீதாராம்'. போர் ஓசையின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகைக் கண்டறிந்த இயக்குநர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினிதத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். நடிகர்களின் நடிப்பும், தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பும் அருமையான காட்சியை தந்தது. எளிமையான காதல் கதை போலல்லாமல், வீரனின் பின்னணியுடன் கதை அமைந்திருக்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்." என குறிப்பிட்டுள்ளார்.
Follow Us