former cricketer dinesh karthick praised dhanush for raayan

ப.பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கடந்த மாதம் 26ஆம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

Advertisment

இப்படம் தனுஷின் 50வது திரைப்படம் என்பதால், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், மகேஷ் பாபு, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் எக்ஸ் தளத்தில் வாழ்த்தியிருந்தனர். அதன் பிறகு தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்திய பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்தார். இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநர், நடிகர் என்ற விதத்தில் தனுஷூக்கு இரண்டு காசோலை வழங்கி கெளரவப்படுத்தினார்.

Advertisment

அதன் பின்பு கடந்த 23ஆம் தேதி ராயன் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில்,“ராயன் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தனுஷ் நல்ல நடிகர் என்பது தெரியும். ஆனால், இப்போது சிறந்த இயக்குநராக ஆகிவிட்டார். தொடர்ந்து திரைப்படங்கள் இயக்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.