கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raveena tandon.jpg)
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டைவிட்டு மக்கள் யாரும் வெளியேறக்கூடாது என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோரைக் காவல்துறை கைது செய்து தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம், பெங்களூரு நகரத்தின் தென்மேற்கு பகுதியில், 45 கி.மீ தூரத்தில் இருக்கும் பிடாடி என்ற இடத்தில் ஒரு பண்ணை வீட்டில், நிகில் கவுடாவுக்கும், ரேவதி என்பவருக்கும் நடைபெற்றுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கையில் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றிருப்பதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். நடிகை ரவீனா டண்டன் இந்தத் திருமண நிகழ்வை நய்யாண்டி செய்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “ஓ சரி. பாவம் இந்தபாவப்பட்ட ஆன்மாக்களுக்கு, நாட்டில் பல பேரால் அவர்கள் குடும்பத்திடம் செல்ல முடியவில்லை, பசியில் வாடுகிறார்கள், மீதியிருப்பவர்கள் மற்றவர்களுக்கு உதவ முயற்சிக்கின்றனர் என்பது பற்றியெல்லாம் தெரியாது போல. அங்கே என்ன பரிமாறப்பட்டது என்பது பற்றி யோசிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)