அனுமதியின்றி வளர்ப்பு; ரோபோ சங்கர் வீட்டில் அதிகாரிகள் அதிரடி

forest officers seized two green parrots in robo shankar house claiming reared without permission.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி தற்போது சினிமா துறையில் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்த்து வரும் ரோபோ சங்கர், இரு பச்சைக் கிளிகளையும் வளர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து அந்த இரு பச்சைக் கிளிகளையும் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வருவதாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் கிளிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். பின்பு கிண்டி சிறுவர் பூங்காவில் கிளிகளை ஒப்படைத்தனர். ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பம் சென்னையில் இல்லை எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் இல்லாத சமயத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

robo shankar
இதையும் படியுங்கள்
Subscribe