/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-7_2.jpg)
'டாக்டர்', 'எதற்கும் துணிந்தவன்', 'டான்' படங்களைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் தனது அடுத்த படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஜெயம் ரவி 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அஹ்மத் இயக்கும் 'ஜன கன மன', கல்யாண கிருஷ்ணன் இயக்கும் 'அகிலன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை பிறகு ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும், அஹ்மத்துடன் இணைந்து பெயரிடப்படாத படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ராஜேஷ், ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. பிரியங்கா மோகன் 'டாக்டர்', 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மூலம் பிரபலமானார். ஸ்க்ரீன் சீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு மீண்டும் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு ஹாரிஸ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)