Advertisment

செல்வராகவனை தொடர்ந்து மோகன்.ஜி படத்தில் இணையும் பிரபலம்

Following Selvaragavan,  a celebrity who joins the Mohan.g's film

2016-ஆம் ஆண்டு வெளியான 'பழைய வண்ணாரப்பேட்டை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. அதை தொடர்ந்து 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அடுத்து இவர் இயக்கும் புதிய படத்தில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். மோகன்.ஜி டீவீட்டை ரீட்வீட் செய்த சாம் சி.எஸ் "நல்ல கதைகளமும், திரைக்கதையும் கொண்ட இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் இணைவதில் மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.

Advertisment

sam cs natty selvaraghavan mohan g
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe