Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத்தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில்சமந்தா விலகினார். இதற்குதசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக்கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Advertisment

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.