Skip to main content

செல்லப்பிராணி விரும்பிகளுக்கென பிரத்தியேக பாடல்!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
gdsgs

 

ட்விஸ்ட்டி டெய்ல்ஸ் தயாரிப்பில் செல்லப்பிராணி விரும்பிகளுக்கான இசை கொண்டாட்டமாக “Follow Follow Me” (ஃபாலோ ஃபாலோ மீ) என்கிற ஆங்கில இசை ஆல்பம் வெளிவர உள்ளது. பல வீடுகளில், அப்பார்ட்மென்டுகளில் நாய்கள் வளர்க்க பல கட்டுபாடுகள் உள்ள இக்காலகட்டத்திலும் செல்லப்பிராணி விரும்பிகள் அதிகமாக பெருகி வருகின்றனர். நாய்கள் வீட்டின் ஓர் அங்கமாகிவிட்ட இந்த சுழ்நிலையில் மனிதனுக்கும், நாய்களுக்கும் உள்ள பாசப்பினைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் கொண்டாட்டமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது . 

 

சென்னையில் 'Dog Themed Restaurant' ஆன Twisty Tails'ன் (ட்விஸ்ட்டி டெய்ல்ஸ்) உரிமையாளர் ரேகா டேண்டே மற்றும் பதினாறு பப்பிகளுடன் இணைந்து இந்த இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். நாய் பிரியர்களுக்கான கொண்டாட்ட மனநிலையையும், உணர்வுப்பூர்வமான பந்தத்தையும், தினசரி அவர்கள் கண்டுக்கொள்ளும் சேஷ்டைகளையும் வெளிபடுத்துகிறது இந்த ஆல்பம். சனித்தா ரவீந்திரன் பாடல் எழுத, இந்த ஆல்பத்தை இசையமைத்து, இயக்கியிருக்கிறார் யதீஷ் மகாதேவா. இவர் தமிழ், மலையாள மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையைமைத்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழில் வெளியான சொன்னா புரியாது , 90ml போன்ற படங்களுக்கு கிரியேடிவ் புரோடிசர் ஆகவும் பனியாற்றி உள்ளார். இப்பாடல் ஆங்கிலத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளிவர உள்ளது.

 

சார்ந்த செய்திகள்