இளம் நடிகர் திடீரென மர்மமான முறையில் மரணம்!!!

ப்ளாஷ் சீரிஸில் நடித்த இளம் நடிகர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

logan williams

டி.சி. காமிக்ஸின் பிரபல சூப்பர் ஹீரோவான ப்ளாஷை மையமாக வைத்து கடந்த 2014ஆம் ஆண்டு சீரிஸ் ஒன்று ஒளிபரப்பானது. அந்த சீரிஸின் தலைப்பிற்கும் ப்ளாஷ் என்றே பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத்தொடரின் இளம் நடிகராக நடித்த லோகன் வில்லியம்ஸ் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக ப்ளாஷ் சீரிஸ் ஹீரோ கிரான்ட் கஸ்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லோகன் வில்லியம்ஸ் கனடா நாட்டில் பிறந்து, பல டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 16 வயதாகும் லோகன் எப்படி இறந்தார் என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

actor
இதையும் படியுங்கள்
Subscribe