Advertisment

இயக்குனராகும் பிரபல தயாரிப்பாளர்!

five star kathiresan

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உட்பட பல வெற்றிப்படங்களை 'பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன். பைவ் ஸ்டார் கதிரேசன் எனத் திரையுலகில் அறியப்படும் இவர், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

Advertisment

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் லாரன்ஸ் நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளது. 'ருத்ரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது போது, அதில் இயக்குனர் பெயர் எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து, இப்படத்தை இயக்குவது யார் என்பது குறித்து ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்த நிலையில், இப்படத்தினை படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசனே இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

actor raghava lawrence
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe