Advertisment

முதல் முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம்?

first time vikram in a.r.murugadoss direction

தமிழ் சினிமாவில் தன் கடுமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம். சமீபத்தில் வெளியான மகான் படத்தில் தன் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்தார். மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. அதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் விக்ரமுடைய அடுத்த படத்தை பிரபல இயக்குநர் இயக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான 'ஏ.ஆர்.முருகதாஸ்' இப்படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான '10 எண்றதுக்குள்ள' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor vikram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe